0




சுண்டெலி ஒன்று .....தவளை ஒன்றுடன் ஒட்டிக் கொண்டிருந்தது.தவளையோ பெரும்பாலும் தண்ணீரிலேயே வசித்து வந்தது.....அது ஒரு நாள் சுண்டெலிக்கு ...தான் நீச்சல் கற்றுக் கொடுப்பதாகக்கூறி ...சுண்டெலியின் காலை தன் காலுடன் ஒன்று சேர்த்து கயிற்றால் கட்டிக் கொண்டது.


அப்போது மேலே பறந்த பருந்து ஒன்று இவற்றைப் பார்த்து கொத்த வந்தது.


உடனே தவளை ...சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது.தண்ணீரில் சுண்டெலி மூழ்கி மூச்சு திணறி இறந்தது...அதன் உடல் மேலே மிதந்தது...ஆனால் கால்கள் இன்னமும் தவளையுடன் சேர்த்து
கட்டப்பட்டிருந்தது....


அந்த சமயம்...தண்ணீரில் செத்த சுண்டெலி மிதந்ததைப் பார்த்த பருந்து கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது.

 
அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது.பருந்து தவளையையும் கொன்று தின்றது.

 
நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன்..அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும்.இல்லையேல் தவளைக்கு ஆன கதியே!
 

Post a Comment

 
Top