
இயற்கை எழில் ததும்பும் லட்ச தீவுகள் |
இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக உள்ள லட்சதீவுகள், அரபிக்கடலில், கேரளக் கடற்கரையிலிருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் 36 தீவுகளை கொண்ட எழிமிகு தீவுக் கூட்டம் தான் இலட்சத்தீவுகள் ஆகும். இத்தீவுகூட்டமானது பல்லவ அரசுக்குட்பட்டு இருந்தது என்பதை ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவகால கல்வெட்டில் ''தீப லக்ஷம்'' என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளதில் இருந்து அரியலாம்.இத்தீவின் தலைநகரம் காவரத்தி. காவரத்தி, மினிக்கோய், அமினி ஆகிய தீவுகள் இத்தீவுக்கூட்டங்களில் முக்குஇய தீவுகளாகும். அகத்தி தீவு: ![]() அமினி தீவு: ![]() கொண்டு அமிந்துள்ளது. இத்தீவானது எந்த ஒரு ஆரவரமும் இன்றி நிசப்தமாக இருப்பது மனதிற்கு மிகவும் இதமாக இருக்கும், இங்கு சூரியன் அஸ்தமிக்கும் காட்சியினை இங்குள்ள விடுதிகள் அமைத்துள்ள செயற்கை மரப்பொருட்களால் அமைக்கப்பட்ட தளங்களில் அமர்ந்து ரசிக்கலாம். அகத்தி தீவிலிருந்து படகின் மூலம் இந்து அமினி தீவிற்கு எளிதாக வந்து சேரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பங்காரம் தீவு: ![]() பங்காரம் தீவு. இங்கு கடல்வால் உயிரினங்களோடு நிலவாழ் உயிரினங்களும் வசிக்கின்றன. ஸ்கூபா டைவிங், ஸ்நார்க்கெலிங் போன்ற கடல்மூழ்கு நீச்சல் மூலம் நீருக்கடியில் உள்ள பலவிதமான உயிரினங்கள், பவளப்பாறைகளை இங்கு காணலாம். அகத்தி தீவிலிருந்து படகு மூலமாகவோ அல்லது ஹெலிகாப்ட்டர் மூலமாகவோ இத்தீவிற்கு செல்ல முடியும். இலட்சத்தீவுகளில் மது அருந்த அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே தீவு பங்காரம் தீவு மட்டும்தான். மாலிகு தீவு: ![]() தீவு ஆகும். 1976 ஆம் ஆண்டு மாலத்தீவும்-இந்தியாவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் இப்படி இத்தீவானது இந்தியாவிற்கு சொந்தமானது. 10.கிலோமீட்டர் நீளமும் 1 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த மினிக்காய்த்தீவின் இயற்கை அமைப்பானது மாலத்தீவின் இயற்கை அமைப்பை போன்றே அமைந்துள்ளது . இத்தீவு முழுவதும் தென்னை மரங்களால் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. காவரத்தி தீவு: ![]() தீவானது கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவிலும், அகத்தி தீவிலிருந்து 50. கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இத்தீவின் கடற்கரை நீரானது மரகதப் பச்சை நிறத்தில் ஸ்படிகம் போன்று பிரகாசிக்ககூடியதாக இருக்கிறது. ![]() இங்கு நீச்சல் தெரிந்தவர்கள், தெரியாதவர்களுக்கேற்றவாறு நீர் விளையாட்டுகளும், மரைன் என்ற மியூசியமும் காணப்படுகின்றன.இந்த மரைன் மியூசியத்தில் பலவகையான மீன்கள், நீர் வாழ் உயிரினங்களை காட்சிக்கு வைத்துள்ளனர். இங்குள்ள கடலில் கண்ணாடி அடித்தளத்துடன் அமைக்கப்பட்ட படகுகளில் பயணிப்பதன் மூலம் கடலில் உள்ள பவழப்பாறைகள், கடல் உயிரினங்களை நேரடியாக பார் கண்டு மகிழலாம். கல்பேணி தீவு: ![]() சுஹேலி பார்: ![]() |
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.