0
நடந்த வந்த பாதையை திரும்பி பார்க்காத எவருக்கும், ரொம்ப சீக்கிரம் அதே பாதையை கண்ணில் காட்டி ரிவர்ஸ் கியர் போட்டுவிடுவார்கள் ரசிகர்கள். இந்த உண்மையை புரிந்து கொள்ளாத ஹீரோக்கள்தான் ஒரேயடியாக ஆட்டம் போடுகிறார்கள். அதுவும் மார்க்கெட்டில் சாதாரண கமர்கட் ரேஞ்சில் இருந்த காலத்திலேயே தன்னை மதித்து படம் கொடுத்தவர்களை அலைகழிப்பவர்களுக்கு ஆண்டவன் கும்பி பாகத்தை தயாராகவே வைத்திருப்பான். இந்த உண்மை புரியாமல் ஒரேயடியாக ஆட்டம் காட்டுகிறாராம் பாபி சிம்ஹா.

சூது கவ்வும், ஜிகிர்தண்டா படங்களுக்கு முன்பே இவரை தன் படத்தில் நடிக்க வைத்தார் ஒருவர். அதுவும் ஹீரோவாக! மெல்ல மெல்லதான் படம் வளர்ந்தது. இவர் அந்த படத்தின் ஷுட்டிங்கை முடிக்கவும், பாபி சிம்ஹா தமிழ்சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்கவும் நேரம் சரியாக இருந்தது. வழக்கம் போல படத்தின் எடிட்டிங் பணிகளை முடித்துவிட்டு சிம்ஹாவை டப்பிங் பேச அழைத்தாராம் அவர்.

‘ம்ஹும்… இப்போ என்னோட ரேஞ்ச் வேற. இருபத்தைந்து லட்சம் கொடுத்தா டப்பிங் பேசுறேன். இல்லேன்னா இல்ல’ என்று கூறிவிட்டாராம் அவர். எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடியும் அவர் மசிவதாக இல்லை. இவர்களுக்கும் வேறு வழியில்லை. நடிகர் சங்க தலைவரிடம் பிரச்சனையை கொண்டு செல்ல, ‘யோவ்… முதல் வாய்ப்பு கொடுத்தவங்கதான் தெய்வம். நீ இந்தளவுக்கு வளருவேன்னு தெரியாத காலத்திலேயே உன்னை ஹீரோவா வச்சு படம் எடுத்திருக்காங்க. அவங்களுக்கு நீ செய்யும் மரியாதை இதுதானா?’ என்றாராம்.

நாடு போற வேகத்தை பார்த்தால், நல்ல முறையில் கொட்டாவி விடுறதுக்கும் தயாரிப்பாளர்ட்ட காசு கேட்பாங்க போலிருக்கு!

Post a Comment

 
Top