0
ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் எமி ஜாக்சன் நடித்த ஐ படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஐ படம் சிறப்பாக இருப்பதாக ஒரு சாரரும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று இன்னொரு சாரரும் கருத்து தெரிவித்தனர். அதன் காரணமாக ஐ வெற்றிப்படமா தோல்விப்படமா என்பதில் குழப்பம் நீடித்தது.

இந்நிலையில் உலகம் முழுக்க வெளியான ஐ படம் வெற்றியா தோல்வியா என்பதற்கான விடை தற்போது வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஐ படம் வெற்றிப்படம்தான். வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபத்தைக் கொடுத்திருக்கிறது. தியேட்டர்காரர்களுக்கும் கணிசமான ஷேர் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டைவிட கேரளாவிலும், வெளிநாட்டிலும் மிகப்பெரிய வெற்றியடைந்த ஐ படம் கர்நாடகாவில் சுமாராகவே ஓடி இருக்கிறது. இதற்கு நேர்மாறாக ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும், வட மாநிலங்களிலும் படு தோல்வியை சந்தித்து இருக்கிறது. அதோடு ஐ படம் உலகம் முழுக்க வசூல் செய்த தொகையும் தெரிய வந்திருக்கிறது. உலகம் முழுக்க 227 கோடி ரூபாயை ஐ படம் வசூல் செய்துள்ளதாம்.

Post a Comment

 
Top