0
படத்துக்குப் படம் சிவகார்த்திகேயனின் மவுசு கூடிக்கொண்டே போகிறது.

அவர் நடிக்கும் படத்தின் பட்ஜெட் ஒரு பக்கம் அதிகமாக, இன்னொரு பக்கம் அவரது படத்தின் பிசினஸும் கூடிக்கொண்டே போகிறது.

சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் மான்கராத்தே.

இப்படத்தின் பிசினஸைவிட காக்கி சட்டை படத்தின் பிசினஸ் இரண்டு மடங்கு என்று கேள்வி.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘காக்கி சட்டை’ படம் வருகிற 27-ஆம் தேதி ரிலீசாகிறது.

தனுஷின் ‘வுண்டபார்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன் தமிழகத்தில் வெளியிடும் உரிமையை வாங்கி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘மான்கராத்தே’ படத்தை தயாரித்து வெளியிட்டது மதன்தான்.

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தையும் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ நிறுவனம்தான் வெளியிட்டது.

இந்தப் படங்களைப்போலவே ‘காக்கி சட்டை’ படத்தையும் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து ரிலீஸ் செய்கிறார் மதன்.

தமிழகத்தில் மட்டும் 370 தியேட்டர்களுக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘காக்கி சட்டை’யை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் மதன்.

அடுத்தடுத்த நாட்களில் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக தியேட்டர்களில் வெளியாகும் படம் ‘காக்கி சட்டை’ என்பது குறிப்பிடத்தக்கது.

மான்கராத்தே படத்தை 330 தியேட்டர்களில்தான் வெளியிட்டிருந்தார்.

அதைவிட 40 தியேட்டர்கள் கூடுதலாக காக்கி சட்டை படம் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலும் மான் கராத்தே படத்தைவிட கூடுதல் தியேட்டர்களில் வெளியாகிறது காக்கி சட்டை.

வெற்றியை தக்க வைத்துக்கொள்ளுங்கள், தலையில் ஏற்றி வைத்துக் கொள்ளாதீர்கள் சிவகார்த்திகேயன். 

Post a Comment

 
Top