0
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகில் உள்ள எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் சென்று வரலாம்.

விசா இருந்தால் போதும் வேறு எந்தத் தடையும் இல்லை.

ஆனால் பக்கத்தில் இருக்கும் இலங்கைக்கு செல்வது என்றால்..ஏகப்பட்ட தடைகள்!

சீமான்களிடமும்.. சிறுத்தைகளிடமும் விளக்கம் சொல்லிவிட்டுத்தான் விமானத்தை பிடிக்க வேண்டும்.

இல்லை என்றால் கஸ்டம்ஸில் முத்திரை குத்துவதற்கு முன்பே இனதுரோகி என்ற முத்திரையை இங்குள்ள ஈழ ஏஜெண்டுகள் குத்திவிடுவார்கள்.

சினிமாக்காரர்களுக்கு இப்படியொரு அச்சம் இருப்பதினாலேயே இலங்கைக்கு கலைநிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தால் கூட செல்வதில்லை.

விவரம் தெரியாமல் விமானம் ஏறியவர்கள் கூட பயணத்தை பாதியோடு ரத்து செய்துவிட்டு திரும்பிய கதை எல்லாம் கடந்த காலத்தில் நடந்திருக்கிறது.

இலங்கைக்கு செல்வதில் இப்படியொரு இடியாப்ப சிக்கல் இருப்பது நமக்கே தெரியும்போது… சூர்யாவுக்கு தெரியாமல் இருக்குமா?

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் மாஸ் படத்தின் படப்பிடிப்பு தூத்துகுடியில் சில நாட்கள் நடைபெற்றது.

சிங்கம் – 2 சென்ட்டிமெண்ட் காரணமாகவோ என்னவோ… படத்தில் இடம்பெறும் பல முக்கிய காட்சிகளை தூத்துகுடியில் எடுக்க திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி அங்கே சென்ற படக்குழுவினருக்கு ஏகப்பட்ட இடைஞ்சல்கள்…!

தொடர்ந்து அங்கே படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, தூத்துகுடியை மேட்ச் பண்ணக்கூடிய வேறு லொகேஷன்களை

தேடியபோது…இலங்கைதான் சரியான இடம் என முடிவு செய்துள்ளனர்.

சூர்யாவிடம் சொன்னபோது அவரது முகம் இருண்டே போனதாம்.

இலங்கைக்குப் போனால் ராஜபக்சேவின் சொந்தக்காரன் என்று சொல்லிவிடுவார்களே என்று முதலில் பயந்திருக்கிறார்.

வேறு வழியில்லை… மாஸ் படத்தின் பாக்கி போர்ஷனை இலங்கையில்தான் எடுத்தாக வேண்டும் என்று வெங்கட்பிரபு சொல்ல…வேறு வரியில்லாமல் சம்மதித்த சூர்யா… ரகசியமாக இலங்கைக்கு விமானம் பிடித்திருக்கிறார்.

சென்னையிலிருந்து பறந்தால் வெளியே தெரிந்துவிடும் என்பதால், இங்கிருந்து ஹைதராபாத் சென்று அங்கிருந்து இலங்கைக்கு பறந்திருக்கிறார்.

சுமார் 20 நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் மாஸ் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு திரும்பி உள்ளனர்.

ஆங்…முக்கியமான விஷயம்… இது ரகசியமான செய்தி… வெளியே யாருகிட்டேயும் சொல்லிடாதீங்க என்ன? 

Post a Comment

 
Top