0
தமிழனின் ரத்தத்தை கடைவாயில் ஒழுகவிட்ட ராஜபக்சே பதவி இறங்கியதை உலகத் தமிழினமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ‘அவரு இருக்கும் போதுதான் அந்த ரூல்செல்லாம். அதான் இப்படி வேற அதிபர் வந்தாச்சே? அவரு இந்தியாவுக்கு வந்து திருப்பதியில கும்புடுறாரு. நாம இலங்கைக்கு போய் படமெடுக்கக் கூடாதா?’ என்கிற எண்ணம் அநேகமாக எல்லா ஹீரோக்களுக்கும் வந்திருக்கும் இந்நேரம். ஏனென்றால் இனி அங்கு போகும் எவரையும் ‘போகாதீங்க… ’ என்று தடுக்கிற அரசியல் சக்திகள் தமிழகத்தில் சற்றே இளைப்பாற ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில்தான் சொல்லாமல் கொள்ளாமல் இலங்கைக்கு விசிட் அடித்து தனது ‘மாஸ்’ படத்தின் ஷுட்டிங்கை முடித்துவிட்டு திரும்பியிருக்கிறார் சூர்யா. (யாராவது நடிகைகள் போயிருந்தால் இந்நேரம் சந்து மக்கள் கட்சி குரல் கொடுத்திருக்கும். போனது ஹீரோவாச்சே? சைலன்ட்!

சரி… ஏன் இங்கில்லாத லொக்கேஷனா? ஏன் இலங்கைக்கு போனார் சூர்யா? உண்மையில் படத்தை தூத்துக்குடியில் எடுக்கதான் போனார்களாம். அங்கு வெளிப்புற படப்பிடிப்பே நடத்த முடியாதளவுக்கு ரசிகர்கள் தொல்லை. வேறு வழியில்லாமல் இலங்கைக்கு போகலாம் என்று கூறியிருக்கிறார் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு. முதலில் தயங்கிய சூர்யா, அப்படியே பிளைட் பிடித்து ஐதராபாத் போய், அங்கிருந்து இலங்கைக்கு போனாராம். இருபது நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்பம் பொங்கும் வெண்ணிலாவாக திரும்பியிருக்கிறார்கள்.

கேட்டால், ‘போவலீயே….’ என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு நம்ம ஊர் லொக்கேஷனும் அந்த ஊர் லொக்கேஷனும் ஒத்துப்போவுதாம். ஆர்யா விஷாலெல்லாம் கௌம்புங்க… பார்த்துக்கலாம்!

Post a Comment

 
Top