0
காலகாலமாக தொடரும் சில பெருமைகளை யாராலும் பீட் பண்ண முடியாது. தியாகராஜா பாகவதர் காலத்திலிருந்தே இந்த போட்டி இருக்கிறது. பாகவதர் ரசிகர்கள் ஒரு புறமும், கிட்டப்பா ரசிகர்கள் மறுபுறமுமாக நின்று துதி பாடிக் கொண்டிருந்தார்கள். அதற்கப்புறம் எம்.ஜி.ஆர் சிவாஜி. அப்புறம் ரஜினி கமல். கால ஓட்டத்தில் கம்பீரமாக இப்போது நின்று கொண்டிருக்கிறார்கள் அஜீத்தும் விஜய்யும். அதற்கப்புறமும் இந்த இரு துருவ அந்தஸ்து யார் யாருக்கெல்லாம் என்றால், விக்ரம் சூர்யா, தனுஷ் சிம்பு என்று போகிறது அந்த போட்டி.

இங்குதான் தனது மூளையை கசக்கினாராம் தனுஷ். வெளியுலகத்திற்கு நண்பர்களை போல நடித்தாலும், தனக்கு போட்டியாக சிம்புவா என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லையாம் அவரால். தன்னால் உருவாக்கப்பட்ட சிவகார்த்திகேயன் போட்டியாளர் என்றால் கூட அதில் ஒரு ஆரோக்கியம் இருக்கிறது. ‘நாலு வருஷத்திற்குகொரு படம் கொடுப்பவர், அதையும் தோல்விப்படமாக கொடுப்பவர் என்று பெயரெடுத்துவிட்ட சிம்பு ஆட்டத்திலேயே இல்லையே. அவரைப்போய் நமக்கு இணையாக பேசுவதா?’ என்று ஒரு மாலை நேரத்திற்கப்புறம் யோசித்த தனுஷ், தனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பிரச்சனை ஏற்பட்டதை போல ஒரு மாயத்தோற்றத்தை மீடியா முன் கொண்டு வந்தால் போதும் என்று நினைத்தாராம். மிச்சத்தைதான் அவர்கள் பார்த்துக் கொள்வார்களே?

அவர் நினைத்ததும் சரிதான். இப்போதெல்லாம் தனுஷை பற்றி எழுதுகிற ஊடகங்கள் சிவகார்த்தியேனுக்கும் இவருக்கும் பிரச்சனை என்றுதான் பீடிகை போட்டு செய்தியை துவங்குகிறது. சிம்பு என்கிற ஒரு நபரை நினைத்தே பார்ப்பதில்லை.

அப்புறம் என்னாத்துக்கு செல்வராகவன் இயக்கும் படத்தை தனுஷ் தயாரிக்கணும், அதில் சிம்பு நடிக்கணும்? என்றுதானே கேட்கிறீர்கள்? அதைதான் தனுஷ் தயாரிக்கவே இல்லையே, அப்புறம் என்னவாம்?

Post a Comment

 
Top