அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்க, முக்கிய வேடத்தில் மூன்றாம்பிறை ஸ்ரீதேவியும், கன்னட நடிகர் சுதீப்பும் நடிக்கின்றனர்.
– என்றெல்லாம் எழுதினால் நிச்சயம் கடுப்பாகிவிடுவீர்கள்.
காரணம்.. இதெல்லாம் அரசப்பழசான செய்தி.
அப்ப புது செய்தி என்ன?
இருக்கு பாஸ்…!
ராஜபக்ஷேவின் கூட்டாளியான சுபாஸ்கரனின் தயாரிப்பில் தயாரிப்பில் கத்தி படத்தில் நடித்ததால், இலங்கைத்தமிழர்கள் மத்தியில் விஜய்யின் செல்வாக்கு சரிந்துவிட்டது.
இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் திட்டத்திலேயே ஈழத்தமிழர்களுக்குப் பிடித்த புலி என்ற தலைப்பை வைக்கச் சொன்னாராம் விஜய்.
அதன்படி புலி என்ற தலைப்பு சூட்டப்பட்டாலும் கதைக்கும் புலிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.
புலி படத்தின் இயக்குநரான சிம்புதேவன், ஆனந்தவிகடன் பத்திரிகையில் ஓவியராக பணியாற்றியபோது கி.மு.வில் கோமு என்ற சித்திரக்கதையை எழுதினார்.
அந்தக்கதைதான் புலி படத்தின் கதை.
இதே கதையைத்தான் தனுஷிடம் கூறினார் சிம்புதேவன். மாரீசன் என்ற பெயரில் அப்படம் தொடங்கவிருந்தது. பிறகு ட்ராப்பானது.
‘கி.மு.வில் கோமு’ என்கிற ‘மாரீசன்’தான் தற்போது புலியாக அவதாரம் எடுத்திருக்கிறது.
கி.மு.வில் நடக்கும் கதையில் விஜய் உடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
நிகழ்காலக்கதையில் ஹன்சிகா மட்டும் இல்லை. மற்ற அனைவரும் உண்டு.
இப்படத்தின் கதாநாயகிகளான ஸ்ருதிஹாசன், ஹன்சிகாவைவிட ஸ்ரீதேவிக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவியின் சம்பளம்..6 கோடி!
அது மட்டுமல்ல, படத்தில் அவருக்கு மகாராணி கதாபாத்திரம் என்பதால் வெளிநாட்டைச் சேர்ந்த காஸ்ட்யூம் டிசைனைர்தான் தனக்கு டிசைன் பண்ண வேண்டும் என்று ஸ்ரீதேவி கறாராகச் சொல்லிவிட்டார்.
அவரது விருப்பத்தின்படி வெளிநாட்டைச் சேர்ந்த காஸ்ட்யூம் டிசைனைர்தான் உடைகளை வடிவமைக்கிறார்.
அவர் டிசைன் செய்யும் ஒவ்வொரு உடையும் லட்சங்களில் இருக்கிறதாம். வெளிநாட்டு காஸ்ட்யூம் டிசைனைருக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம்.
ஸ்ரீதேவிக்கு அடுத்து அதிக சம்பளம்…கன்னட நடிகர் சுதீப்புக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு சம்பளம் 4 கோடி!
புலி படத்தில் விஜய் ஹீரோ மட்டுமில்லை, மறைமுக தயாரிப்பாளரும் கூட.
தன்னுடைய பி.ஆர்.ஓ. பெயரில் பெரும்தொகையை விஜய்யே முதலீடு செய்துள்ளாராம்.
புலி படத்தில் விஜய்க்கு இரட்டை வேடம்… இல்லை.. இல்லை..மூன்று வேடம்…என்றெல்லாம் பட்டிமன்றம் நடக்கிறது.
உண்மையில்… விஜய்க்கு ஒரே வேடம்தான். இரண்டு காலக்கட்டங்களில் வாழ்கிற ஒரே விஜய்.
புலி படத்தின் கதையை முழுமையாக அறிந்து கொள்ள கி.மு.வில் கோமு கதையைத் தேடிப்பிடித்து படிங்கள்…
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.