0
சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படம் பிப்ரவரி 27 அன்று
வெளிவரவிருக்கும்நிலையில், அவரது அடுத்தப்படமான ரஜினிமுருகன் படத்துக்கும் ‘நாள் குறித்து’விட்டார் தயாரிப்பாளர் லிங்குசாமி.

ரஜினிமுருகன் படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கிய ஈராஸ் இண்டர்நேஷ்னல், அதைவிட பெரியவிலைக்கு தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்யும் உரிமையை கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனத்துக்கு விற்றுள்ளது.

‘ரஜினி முருகன்’ படத்தின் வியாபாரம் சூடு பிடித்து… பெரியவிலைக்கு பிசினஸ் ஆனதால்… மே 1 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்வது என முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் ‘ரஜினி முருகன்’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 45 நாட்களாக ஓய்வே இல்லாமல் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இடையில் தன்னுடைய பிறந்தநாள் குறுக்கிட்டபோதுகூட, படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சிவகார்த்திகேயன் சென்னைக்கே வரவில்லை.

மதுரையிலேயே…அதுவும் ரஜினி முருகன் படப்பிடிப்பிலேயே பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இதற்கிடையில், நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் மகள் திருமணம் சென்னையில் நடந்தது.

சிவகார்த்திகேயனுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.

ரஜினி முருகன் படப்பிடிப்பில் இருந்ததால், ஞாபகமாக தன் அம்மாவையும், மனைவியையும் கோபால் மகளின் திருமண நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

அங்கு சென்ற சிவகார்த்திகேயனின் தாயார் நக்கீரன் கோபாலிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.

அவர் இன்னார் என்று தெரிந்ததும் தன் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தெரிவித்தாராம் கோபால்.

சிவகார்த்திகேயனின் அப்பா போலீஸ் அதிகாரியாக இருந்தவர்.

அவர் பணியில் இருந்தபோது நக்கீரன் கோபாலுக்கு நன்கு அறிமுகமானவர் மட்டுமல்ல, கோபால் சிறையில் இருந்த காலத்தில் அவருக்கு நிறைய உதவிகளும் செய்தவராம்.

அத்தனை பரபரப்பிலும் பழைய கதைகளை எல்லாம் கூறி சிவகார்த்திகேயனின் அப்பாவைப் பற்றி சிலாகித்திருக்கிறார் கோபால்.

இக்கட்டான தருணங்களில் தனக்கு உதவிகள் செய்த அந்த போலீஸ் அதிகாரியின் மகன்தான் சிவகார்த்திகேயன் என்று தெரிந்ததும், கோபாலுக்கு கூடுதல் மகிழ்ச்சி.

இந்த விஷயங்கள் எதுவுமே தெரியாமல் கோபால் வீட்டு கல்யாணத்துக்கு சிவகார்த்திகேயன் வரவில்லை என்பதை வைத்து சிண்டு முடிய முயல்கிறார்களாம் சிலர். 

Post a Comment

 
Top