0
தல என்றால் அஜித். அஜித் என்றால் தல என்று உலகத்துக்கே தெரியும்.

இதற்கு மாறாக டி.ராஜேந்தரை தல என்று குறிப்பிட்டு ஒரு குத்துப்பாடலை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்தில் இப்படியொரு பாடல் இடம்பெறுகிறது.

அனேகன் படத்தில் சூப்பர்ஹிட் ஆன ” டங்கா மாரி ஊதாரி ” பாடலை எழுதிய ரோகேஷ் எழுதி, இமான் இசையில் அனிரூத் பாடிய பாடல் இப்படி தொடங்குகிறது…

“டண்டனக்கா
எங்க தல எங்க தல டீ ஆரு
சென்டிமென்ட்டுல தார்மாறு
மைதிலி என்னை காதலி”ன்னாரு
அவரு உண்மையா
லவ் பண்ண சொன்னாரு
மச்சான் – அங்க தான்டா
எங்க தல நின்னாரு”

ரோமியோ ஜூலியட் படத்தில் கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி – பூனம்பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள்.

மற்றும் வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

வசனம் – சந்துரு

இசை – D.இமான்

பாடல்கள் – மதன்கார்க்கி, ரோகேஷ், தாமரை

கலை – மிலன்

நடனம் – ஷெரீப்

ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்

எடிட்டிங் – ஆண்டனி

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் லக்ஷ்மன்.

“இன்றைய இளைஞர்களின் செல்லப் பாடலாக இது அமோக வரவேற்பை பெரும் என்பதில் ஐயமில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக சிறப்பாக வந்திருக்கிறது ரோமியோ ஜூலியட் பெரிய வெற்றிப் படமாகும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குனர் லஷ்மன். 
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top