0
தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரான தோழர் தியாகு, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே சில வருடங்களுக்கு முன் பாடலாசிரியை தாமரையை இரண்டாவது மனைவியாக்கிக் கொண்டார்.

சிலவருடங்கள் சேர்ந்து வாழ்ந்தநிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

எனவே, தோழர் தியாகு கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாராம்.

“என் கணவர் தியாகு என்கிற தியாகராஜன் கடந்த 23.11.2014 அன்று வீட்டை விட்டு ஒரு திருடனைப் போல் வெளியேறித் தலைமறைவாகி விட்டார்.  இன்று வரை நான் அவரைக் காணவில்லை.”
என்று குற்றம்சாட்டியதோடு, தியாகுவின் தமிழ் தேசிய விடுதலை இயக்க அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் தாமரை.

தாமரை இப்படி ஒரு குற்றச்சாட்டை சொன்னாலும் உண்மையில் தோழர் தியாகு எங்கும் ஓடி ஒளியவில்லை. பல தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெற்று வருகிறார்.

இந்நிலையில், “தான் எங்கும் ஓடி ஒளியவில்லை” என்றும், “தாமரையுடன் திரும்ப வாழவும் விரும்பவில்லை” என்றும் தியாகு தெரிவித்துள்ளார்.

‘’நான் ஏன் ஓடி ஒளியணும்? பத்திரிகைகளுக்கு தாமரை கொடுத்த கடித்தைப் பாத்தேன். எவ்ளோதான் மோசமான கருத்து வேறுபாடு இருந்தாலும் பிரிவுதான் இதுக்கு நிரந்த தீர்வா இருக்கும்?

நான் வேளச்சேரியிலதான் இருக்கேன். நான் எங்கயும் ஓடி ஒளியலை. ஒரு நாள் என்னோட போன் ஸ்விட்ச் ஆப் ஆனதுக்காக எப்பவுமே இப்படிதான்னு முடிவு பண்ணா என்ன அர்த்தம்?

நான் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துட்டுதான் இருக்கேன். களப்பணியிலயும் இயங்கிட்டுதான் இருக்கேன்.

தொடர்ந்து 5 வருஷமா எங்களுக்குள்ள ஒத்து வரலைனு அவங்களே சொல்றாங்க. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்னு யோசிக்கிற பொண்ணும் அவங்க இல்ல… அப்படி இருக்க எதுக்காக இப்படி யோசிக்கணும்?

என் மகனோட நான் தொடர்ந்து ஈமெயில் மூலமா பேசிட்டுதான் இருந்தேன். அவனும் எனக்கு பதில் அனுப்பி இருக்கான். மகனுக்கும் எனக்குமான உறவு சுமூமாக இருந்த நிலையில், அவனோட மெயிலையும் முடக்கிட்டாங்க.

ஒரு கட்டத்துல மகனை பிரியிற சக்தி எனக்கில்லைனாலும் என் மேல பாசத்தோட இருக்குற மகனுக்கு கஷ்டத்தை கொடுக்க வேணாம்னு கொஞ்சம் கொஞ்சமா அவனைவிட்டும் வேற வழியில்லாம அவனை தொடர்பு கொள்ள முடியாம பிரிஞ்சிட்டேன்.

ஒரு பையனுக்காக ரெண்டு பேர் சண்டை போடுவதை விட, அவன் அம்மாகிட்டயே அவன் இருக்கட்டும்னு விலகிட்டேன் என்றார்.

இது ஒரு பக்கம் இருக்க, தியாகு உடனான தன் தனிப்பட்ட குடும்பப்பிரச்சனையை ஏதோ தமிழ் இனத்தின் பிரச்சனையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தாமரை.

பெண் எழுத்தாளர்கள், பெண் கவிஞர்கள், பெண்ணியவாதிகளுக்கு அழைப்பு விடுத்து தன் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டிக்கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல, தியாகு உடனான பிரச்சனை குறித்து தாமரை விடுத்த அறிக்கையில், “நான் கனவு கண்ட தமிழ்த்தேசம் அறம், ஒழுக்கம்,நேர்மை, உண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதற்காகத்தான் இத்தனை ஆண்டு காலம் உறக்கமின்றி உழைத்திருக்கிறேன்.
இப்போது அதற்கு ஊறு நேர்ந்திருப்பதாகக் கருதுகிறேன்.

எனவே சாரத்தில் என் போராட்டம் என்பது பொது வாழ்க்கையில், குறிப்பாக தமிழ்திராவிடத்தமிழ் அரசியலில் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

நியாயத்தை எடுத்துக் கூற ஒரு தமிழ்ச் சான்றோர் கூடவா இந்தத் தமிழ்ச் சமூகத்தில் இல்லாமல் போய் விடுவார்கள் ? ”

என்றெல்லாம் சினிமா வசனத்தைப் போல் தமிழ் இனத்துக்காக கண்ணீர் வடித்திருக்கிறார் தாமரை.

இப்படி எல்லாம் தமிழினத்தின் மீது பாசம் காட்டும் தாமரையின் தாய்மொழி தமிழ் அல்ல, கன்னடம் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதுமட்டுமல்ல, தன் ஒரே மகனை சென்னை தி நகர் அபிபுல்லா சாலையில் கர்நாடக பள்ளியில்தான் படிக்க வைத்திருக்கிறார் தாமரை.

தோழர் தியாகு தாய் தமிழர் பள்ளியை நடத்தி வருகிறார்.

தன் மகனை அந்தப்பள்ளியில் சேர்க்க விரும்பினாராம் தியாகு.

தாமரையோ தன் தாய்மொழிப்பற்று காரணமாக கர்நாடக பள்ளியில் மகனை சேர்த்திருக்கிறார்.

இதன் காரணமாகவே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, இன்று விவாகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறதாம்

Post a Comment

 
Top