0

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாரி’. படத்திற்கு இசை அனிருத். படத்தை சரத்குமார், ராதிகா சரத் குமார், லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து தயாரிக்கின்றனர். படம் முழு மூச்சில் படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் மற்றுமொரு சிறப்பாக பாடகர் விஜய் யேசுதாஸ் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். அதுவும் போலீஸ் ஆபிசர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது குறித்து கேட்கையில் எனக்கு இது ஒரு நல்ல அனுபவம். நடிப்பது குறித்து தனுஷிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார் விஜய் யேசுதாஸ்.

விரைவில் படத்தின் பாடல்கள் , மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், மற்றும் காளி வெங்கட் ஆகியோரும் முக்கிய பாத்திரத்தில் வருகின்றனர். 

Post a Comment

 
Top