0
பன்றிக் காய்ச்சல் நோயை குணப்படுத்தவும், நோய் வராமல் தடுக்கவும் ‘கபசுர குடிநீர்’ அருந்த வேண்டும் என்று தமிழ்நாடு சித்த மருத்துவ டாக்டர்கள் கூறினர். தமிழ்நாடு சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் பிச்சையாகுமார் மற்றும் துணை செயலாளர் டாக்டர் தமிழ்கனி ஆகியோர்  கூறியதாவது:

 தமிழகத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்த, ‘நிலவேம்பு குடிநீர்’ அருந்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதன்மூலம் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பன்றிக் காய்ச்சல் நோய் பீதி ஏற்பட்டுள்ளது.

இதற்கு, சித்த மருத்துவத்தில் ‘கபசுர குடிநீர்’ என்ற கசாயம் தயாரித்து வழங்கப்படுகிறது. இந்த கசாயத்தில், நிலவேம்பு, சிறுதேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை, கற்பூரவல்லி, சித்தில், சோரைகிழக்கு, கோஸ்டம், அக்ரகாரம் என 11 வகையான மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

10 கிராம் கசாயத்தை 200 மில்லி தண்ணீரில் நன்கு காய்ச்சி 50 மில்லியாக்கி வடிகட்டி காலை மற்றும் மாலை குடித்தால் பன்றிக் காய்ச்சல் நோய் குணமாகும்.


பன்றிக் காய்ச்சல் வைரஸ் வருவதை தடுக்கவும் இந்த கபசுர குடிநீரை அருந்தலாம். இந்த கசாயம் அனைத்து சித்த மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும்.


தனியார் கடைகளில் 100 கிராம் கபசுர குடிநீர் சூரணம் ரூ.80க்கு விற்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது தலைமை செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன், செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

 
Top