0
 படத்தின் கதைப்படி, சிவகார்த்திகேயனின் பெயர் மதிமாறன் படத்தின் ஆரம்பத்தில் அமைதியான போலீஸாக வந்து காமெடி செய்கிறார்.

ஒரு கட்டத்தில் அவரின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பத்தால் தான் யார் என்பதை நிரூபிக்கும் விதமாக சீரியசாக களமிறங்குகிறார். வடமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கூலி வேலைக்கு வரும் அப்பாவி ஆட்களை விபத்தில் சிக்க வைத்து, அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதுபோல் அவர்ளுக்கு மூளைச்சாவை ஏற்படுத்தி, அவர்களின் உடல் உறுப்புகளை வெளிநாட்டிலிருக்கும் பண முதலைகளிடம் விற்று சம்பாதிக்கிறது ஒரு கும்பல்.

இந்நிலையில் சாதாரண போலீஸ் அதிகாரியான மதிமாறன் வில்லனை எப்படி எதிர்கொள்கிறார். அக்கும்பலை பிடித்தாரா…? இல்லையா…? என்பதே படத்தின் மீதிக்கதை.

சமீபத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் கொஞ்ச நேரமே காட்டியிருக்கும் ‘உடல் உறுப்பு திருட்டை’ முழு நீளமாக படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். வழக்கமான போலீஸ் கதையாக இருந்தாலும் அதில் சிவகார்த்திகேயனின் காமெடி, அனிருத்தின் சூப்பரான பாடல்கள், த்ரில்லர் படத்திற்குரிய சின்ன சின்ன ட்விஸ்ட் என ஒரு சுவாரஸ்யமான படத்தைத் தர முயன்றிருக்கிறார்கள்.

ஸ்ரீதிவ்யாவை காதல் வலையில் விழ வைக்க முதல்பாதி முழுக்க எடுத்துக்கொள்ளும் சிவகார்த்திகேயன், இரண்டாம்பாதியை வில்லனுக்காக ஒதுக்கியிருக்கிறார். காமெடி, காதல் என முதல்பாதி செல்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு போலீஸ் வேடம் ஓரளவு நன்றாக பொருந்தியுள்ளது. காமெடியிலும், ஆக்சனிலும் அசத்தியிருக்கிறார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் போலிஸ் கெட்டப்பில் தோன்றியுள்ளார். ஆக்சன் இருந்தாலும் வழக்கமான தனது காமெடியிலும் அசத்தியுள்ளார். அஜித், விஜய் போன்றோரின் பிரபல வசனங்களை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி கைதட்டல்களை அள்ளுகிறார் சிவகார்த்திகேயன். ஸ்ரீதிவ்யா படம் முழுவதும் அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கொள்ளை கொள்கிறார். இருந்தாலும் நடிப்பில் நல்ல அனுபவம் தெரிகிறது.

இந்தி வில்லன் விஜய் ராஸ் இப்படத்தின் மூலம் தமிழில் கால்பதித்திருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பின் மூலம் வில்லனுக்குரிய அழுத்தமான பாதிப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் பிரபுவின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம். இமான் அண்ணாச்சி, மயில்சாமி ஆகியோர் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

சூப்பரான பாடல்கள், ஆக்ஷன் காட்சிகளின்போது அனல்பறக்கும் பின்னணி இசை, நேர்த்தியான ஒளிப்பதிவு, எடிட்டிங் என டெக்னிக்கல் விஷயங்கள் பெரிய அளவில் படத்திற்கு பலமாக உள்ளன. முதல் பாதி காமெடியாகவும், இரண்டாம் பாதி சீரியசாகவும் செல்கிறது.

ஆக மொத்தத்தில் ‘காக்கி சட்டை’ அதிரும் காமெடி மற்றும் அதிரடியில்…

Post a Comment

 
Top