0
பெருநகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளை அந்த நெடுஞ்சாலையில் உள்ள ஏதாவது ஒரு குறிப்பிட்ட உணவகங்களில் இளைப்பாற நிறுத்துகிறார்கள்……..

ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் இலவசமாக அங்கே உணவு வழங்கப்படுகிறது….. வேறு என்ன தருகிறார்கள் என்பது தெரியவில்லை….

பயணக்களைப்பினால் பயணிகள் நாம் ஏதாவது வாங்கினால் விலை தாறுமாறாக இருக்கிறது….. விலைக்கேற்ற தரமான பொருட்களும் கிடைப்பதில்லை….. லாபம் அதிகம் கிடைக்கும் பெயர் தெரியாத பிராண்டுகளின் பொருட்களே அதிகமாக விற்கப்படுகின்றன…….

அங்குள்ள ஹோட்டல்களில் சாப்பிட நினைப்பவர்கள் சில விசயங்களை மனதில் கொள்ள வேண்டும்…..

முதலில் நீங்கள் சாப்பிடப்போகும் உணவுகளின் விலையை கண்டிப்பாக தெரிந்து கொள்ளவும்….. சாதாரண ஹோட்டல்களைப்போல் எண்ணிக்கொண்டு சாப்பிட்டு விட்டு பில்லைப்பார்த்தால் ராயல் லீ மெரிடியன் விலைப்பட்டியலை நீட்டுவார்கள்…..( திருச்சி To சென்னை சாலையில் ஒரு மசாலா தோசைக்கு 80 ரூபாய் கொடுத்திருக்கிறேன்…. வயிறு உபாதைகள் இலவசம் )

மிரட்டும் தொனியில் டிப்ஸ் வேறு கேட்ப்பார்கள்……

உணவு, தரம், அளவு, விலைப்பற்றி பேசினால் காதில் வாங்கிகொள்ள மாட்டார்கள்…. மீறி கத்திக்கொண்டு சண்டையிடுட்டால்…. நம் ஓட்டுனர் வண்டியை ஸ்டார்ட் செய்து நகர்த்துவார்…. சாபமிட்டுக்கொண்டே நாம் வண்டியில் ஏறி பயணிக்கவேண்டியதுதான்…

மேலும் இரவு நேரங்களில் நடு இரவில் இந்த மாதிரியான இடங்களில் பேருந்தை நிறுத்துவார்கள்……”வண்டி 15 நிமிஷம் நிக்கும், டீ, காபி, டிபன் சாப்பிடறவங்க சாப்பிடலாம்” என கத்துவார்கள்…..

நள்ளிரவில் அயர்ந்து தூங்கும் பயணிகள் யாரும் எழுந்து வரவில்லையென்றால் பேருந்தின் இருபுறமும் தட்டி, தட்டி சத்தமிட்டு எழுப்பி தூக்கத்தை கலைத்து எழுப்பி வரவழைப்பார்கள்….திடுக்கிட்டு நாம் எழவேண்டியிருக்கும்…. இச்சூழலில் உறங்கும் குழந்தைகளின் நிலையை எண்ணிப்பாருங்கள்……

மேலும் அங்கே உள்ள விசிடி, டிவிடி கடையில் கிழிந்த ஸ்பீக்கரில் கானா பாடல்களை சத்தமாக ஒலிக்க விடுவார்கள்….. ரிலீசான புதிய படங்களை திருட்டு டிவிடியின் டெமோ காட்டி விற்பனை செய்வார்கள்…. (இங்கு காவல்துறை, கடமை என்று பேசுவது வீண்)

ரோட்டோரமும் டியூப்லைட்டை கட்டிவைத்து வெளிச்சமிட்டு, அப்பகுதியில் சிறுநீர் கழிக்க விடாதவாறு விரட்டுவார்கள்… சரி… அங்குள்ள கட்டண கழிப்பிடத்திற்கு சென்றால்…. அப்பப்பா… கொஞ்சமும்கூட சுத்தம் செய்யப்படாத அக்கழிப்பிடங்களால் தொற்றுநோய்கள்தான் ஏற்படும்…..

அவ்வப்போது வந்துபோகும் பயணிகள் யாரும் இவர்களுக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் தேவையில்லை என்பதால் இவ்வாறு பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள்…. இவர்களிடம் மாட்டிக்கொண்டு சண்டையிட்டு மனஉளைச்சல் மட்டுமே மிஞ்சும்… எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க இயலாது…..அவர்களை என்னால் மனிதர்களாகவே பார்க்க தோனுவதில்லை…..

நாம்தான் மாறிக்கொள்ள வேண்டும்…….. நீண்டதூர பயணம் செய்பவர்கள் தங்களுக்கு தேவையான தண்ணீர், உணவு பொருட்களை தாங்களே எடுத்து வந்து விடுவது நல்லது… அல்லது நாம் ஏறும் இடங்களில் உள்ள கடைகளில் தரமான உணவு வகைகளை பேக்கிங் செய்து கொண்டு ஏறி விடுவது நல்லது…. இவ்வாறு இளைப்பாற நிறுத்தும் இடங்களில் பேருந்தில் இருந்தவாறே சாப்பிட்டுவிட்டு அமர்ந்துவிடுவது நல்லது…… குறைந்த பட்சம் பணம் மற்றும் Food Poison ஏற்படுவதிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்……

காதுகிழிய கானா பாடல், கட்டண கழிப்பிட தொல்லையிலிருந்து காத்துக்கொள்ள நீங்களே வழிசெய்துகொள்ளவேண்டும்……

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top