0

"தொட்டாலே ஷாக் அடிக்கிற மாதிரி ஒரு பெரிய கேஸ் இருந்த புடிச்சுட்டு வா... அப்புறம் நான் நடவடிக்கை எடுக்கலைன்னா.. கேளு" என பிரபு சொல்ல... ஹீரோவின் ஆக்சன் களம் ஆரம்பிக்கிறது.... இந்நிலையில், ஒரு மருத்துவமனையில் மனித உடலுறுப்புகளை திருடி வியாபாரப் பொருளாக பாவித்து விற்பனை செய்யும் கொடூர குற்றம் நடப்பது சிவகார்த்திகேயனுக்கு தெரியவருகிறது.

இறுதியாக உடலுறுப்புகளை திருடி விற்கும் கும்பலை, கண்டிபிடித்து, அவர்கள் கொடுக்கும் சாவால்களை எல்லாம் சமாளித்து, வில்லன்களை எல்லாம் எப்படி அழிக்கிறார் என்பது தான் படத்தின் மீதிகதை.


மெரீனா, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப் படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே என காமெடி ஹீரோவாக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு போலீஸ் வேடம் நன்றாக பொருந்தியுள்ளது. இந்த படத்தில் காமெடியிலும், ஆக்சனிலும் கலக்கி இருக்கிறார்.

ஸ்ரீதிவ்யா படத்தின் நாயகியாக மட்டுமல்லாமல், கதையின் நாயகியாகவும் வருகிறார். பாடல் காட்சிகளில் அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கொள்ளை கொள்கிறார்.

இன்ஸ்பெக்டராக வரும் பிரபுவுக்கு சுவாரசியமான கதாபாத்திரம்...

இம்மான் அண்ணாச்சி, மனோபாலா காமெடி படத்திற்கு கூடுதல் பலம் என்றே சொல்லலாம்.

முதல் பாதி காதல், காமெடி என ஜாலியாக நகர... இரண்டாம் பாதியில் ஆக்சன் அனல் பறக்கிறது... காமெடி ஹீரோவாக நடித்து வந்த சிவகார்த்திகேயனை, ஆக்சன் ஹீரோவாக தேவையான இடங்களில் காட்டியிருப்பது இயக்குனரின் திறமையை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது.

அனிருத்தின் இசையில் அனைத்துப் பாடல்களும் ஏற்கனவே செம ஹிட். பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார் அனிருத்.

மொத்தத்தில் காக்கி சட்டை.... நல்ல பொழுது போக்கு படம் தாங்க....  நம்பி போகலாம்.... 

Post a Comment

 
Top